Peacock Rangolis

Here are the kolams and rangolis in this page:
  • NEW YEAR RANGOLI
  • Twin peacocks
  • 2022- Post Diwali Peacock.....
  • Peacock
  • Home Kolams- Peacock...
  • Diwali 2021 rangoli
  • 2021- Mother's Day.....Sharing an old rangoli......
  • 021- Tamil New Year... பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில் எள்ளளவும் ஐயமில்லையே I have surrendered unto the Lord who rides the green peacock.... And.... I don't have any fear whatsoever...
  • Mahasivarathri kolam 2021
  • 2021-Thai Poosam-Threshold- Peacock
This is a freehand rangoli.

Twin peacocks with hanging diyas

Look who gained weight post Diwali and is now trying hard to get back in shape........with another festive season round the corner (Christmas), one has to be careful.....

Thaipoosam kolam

This is a freehand rangoli.
This is a freehand rangoli.

தாய்மை என்னும் தூய அன்பு கங்கை.....கடவுள் தன் கருணையை அனைவரும்  ப்ரத்யட்சமாக அனுபவிக்க அனுப்பி வைத்த புனிதம்.....த்யாகம் என்பது அவள் வாழ்க்கை முறை.....வழிகாட்டல் என்பது இயல்பான நடைமுறை...பக்தியென்னும் இசைக்கு குருவாய் அமைந்து, திருத்தித் திருத்தி மெருகேற்றும் மேன்மை இதயம் என்பது பூவாய் மலர்ந்து விடும் மென்மை.......விழி தந்து வண்ண உலகைப் பார்க்க வைத்து, மொழி தந்து, எங்கும் பாலம் அமைத்து, வழி தந்து நடக்க வைக்கும் இன்பம்......... நம் குறைகளே தெரியாத, தெரிந்தாலும் மன்னித்து விடுகின்ற நிறை குடம்........தள்ளாடும் தளர்நடை ரசித்தவள்...........முள்ளாடும்  பாதைகளில் எச்சரிக்கையானவள்.நம் உள்ளாடும் நற்பண்புகளுக்கெல்லாம்ஊற்றுக் கண் ஆனவள்.........உறவின் இழைகளை பலப்படுத்தி உற்ற துணை ஆக்கியவள்..........இன்றைய நம் வாழ்வுக்கு, அன்றே  வடிவம் தந்து வண்ணம் ஏற்றியவள்.எண்ணமெல்லாம் நீ தான் அம்மா........ஏற்றமெல்லாம் உன்னால் அம்மா.......

பொங்கி வழியும் உள்ளத்திற்கு வடிகால் அமைத்து உன்னைப் போற்றத் தாய் மொழியிலும்  போதிய சொற்கள் இல்லையே தாயே......தாள் பணிகின்றோம்.......ஜானகி ரமணன் புனே

சித்திரைப் பெண்ணாள் பரிவுடன் சிரித்து வருகின்றாள்

முத்திரை பசும்பொன்னாய்

ஒளிமழை சிந்தி வருகின்றாள்.

பொங்கும் இன்பக் கடலாய் ஆடி வருகின்றாள்.

மங்கல முத்துச்சுடர்கள் ஏந்தி வருகின்றாள்.

இருளைக் கலக்கி விரட்டும் கதிராய் வருகின்றாள்.

மருள் தரும் நோயெனும் தீயை மாய்க்க வருகின்றாள்

இவள் கருணைக்கு முன் சிறுமைகள் நிற்பதில்லை.

ராம பாணத்தின் முன் அற்ப ஜந்துக்கள் நிலைப்பதில்லை. பக்தியை எதிர்த்து எதுவுமே என்றுமே வென்றதில்லை .

சக்திகள் தோற்றதாய்

சரித்திரமே இல்லை.

மற்றவருக்காய் மனம் உருகி வேண்டுவது வீண்போவதில்லை.

சுயநலங்கள் சுருண்டு போகட்டும்.

மாசுகள் தூசாய் அடித்துச் செல்லப்படட்டும்.

புத்துணர்வுப் பூக்கள் பாரெலாம் மலரட்டும்.

புதிதான உதயம் விடிவெள்ளியாய் புலரட்டும்.

கைகோர்த்து புவனம் அதை வரவேற்கட்டும்.

தமிழ் போலும் வளமான, இன்பமயமான ஆண்டு துவங்கட்டும்.

ஆண்டவன் அருள் அனைவரையும் காக்கட்டும்.

Mrs. Janaki Ramanan- Pune

Mahasivarathri kolam 2021.

DC:Aryani designs

This is a freehand rangoli.

Pages