Abhirami Anthathi...
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை