Gallery
JANANI RAGHAVAN
- 2020- Ganesh Chaturthi- Ganesha, His Mouse and Diya....
- 2020- Janmashtami- Jagannaathji under a peacock feather tree...
- Home Kolams
- 2020- Varalakshmi Vratham
- Kolam Notebook- Kolams/Artwork
- Home Kolams
- Kolam Notebook/ Drawing Notebook Artwork
- 2020- Guru Poornimaa
ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் செய்த பொழுது
தென்றலில் அப்படியொரு சுகமோ தடாகங்களில் ஆயிரமாயிரம் தாமரை மலரும் எழிலோ!
பூவுலகமே புஷ்பத் தோட்டம் ஆனது போல் மயக்குகின்ற மணமோ!
திக்கெட்டும் பிரசாந்த நிலையோ!
எல்லோர் இதயங்களிலும் இதமான இன்பமோ
முனி புங்கவர்கள்
,தவச்ரேஷ்டர்கள் காத்திருந்த கணமோ!
மதுராபுரியின் சிறையிலே சந்திரோதயமோ!
தேவகி_வசுதேவர் காலம் காலமாய் செய்த தவத்தின் பயனோ!
அண்ட சராசரம் படைத்துக் காப்பவன் அவர்கள் விழிகளில் பூத்து விட்ட மாயமோ!
அவர்களுக்குப் புரிய வேண்டுமென்று சதுர்புஜனாய், சங்கு சக்ர தாரியாய், சர்வ அலங்கார பூஷிதனாய் வந்து விட்டோ வேகமோ!
அனைத்தையும் அனைவரும் த்யாகம் செய்யும் யாகமோ!
காரணனே, காரியமாய் இறங்கி வந்த அற்புதமோ!
அந்த தெய்வீக தம்பதியரின் ஆனந்த பாஷ்யம் நம் விழிகளிலும் பெருகும் பரம சுகமோ!
Mrs. Jankai Ramanan, Pune
ஆண்டாள் திருவடி சரணம்.
விஷ்ணுவையே சித்தத்தில் நிறைத்து , வாழ்ந்திருந்த விஷ்ணு சித்தராம் பெரியாழ்வாருக்கு , ஒரு பரிசுத்த மலரைப் பரிசாகத் தர விழைந்தான் பரந்தாமன். அதற்கு ஆடிப் பூரம் என்ற திருநாளைத் தேர்ந்தெடுத்தான்.
அன்றுதான் பூதேவியின் அம்சமான ஆண்டாள் நம் தவப்பயனாய்ப் பூவுலகைத் தேடி வந்தாள்.
திருவில்லிப்புத்துரைத் தேர்ந்தெடுத்தாள்..புனிதத் துளசிச் செடி அருகே குழந்தையாய்த் தவழ்ந்தாள். பெரியாழ்வாரை ஆனந்தக் கடலில் ஆழ்த்தி விட்டாள்
அவருடைய கண்ணுக்குக் கண்ணாய், உயிரின் உயிராய் , வளர்ந்தாள்.
திருப்பாவை என்னும் தமிழமுதம் தந்தாள். அதில் வேத, வேதாந்தத்தின் சாரம் பிழிந்து தந்தாள்.
கண்ணனின் அற்புத தரிசனம் காட்டி, நம்முளே பக்தி வெள்ளம் பாய்ந்திடச், செய்தாள்.
மலர்ப் பாதை ஒன்றமைத்து மாதவனின் பாத மலருக்கு
நம்மை அழைத்துச் செல்லும் கோதையின் திருவடி சரணம்.