திரும்பிய பக்கமெல்லாம் தீபத்தின் ஒளிதான்
அகத்திலும் புறத்திலும்
கங்கா ஆரத்தியின் ஒளிதான்.
அறிவின் ஒளியோடு போட்டியிட்டு வென்றுவிடும் அன்பின் ஒளி தான்.
இருட்டினை விரட்டிடும் நம்பிக்கையின் ஒளிதான்
புரட்டுகளை புறமுதுகிடச் செய்யும் புனிதத்தின் ஒளிதான்
மருட்சியே இல்லாத மகிழ்ச்சியின் ஒளிதான்.
மனிதநேயமாய் பரவி வரும் மகத்தான ஒளிதான்
வெற்றி முரசம் கொட்டிடும் பாதைகளில் வீசி வரும் ஒளிதான்.
உறறமும், சுற்றமும் கூடிடும் உறவெனும் ஒளிதான்
தாயாய் இருந்து காப்பவன் தந்திடும் ஒளிதான்
அகிலம் படைத்தவன்
உள்ளிருக்கும் ஒளிதான்.
எங்கும் எதிலும் ஊடுருவி
உயரத்திடும் ஆனமாவின் ஒளிதான்.
ஓ இததகையய அறபுதம் தான் தீபாவளி என்னும் பொன்னொளியோ!
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்
.
ஜானகி ரமணன்..